முகப்பு
ஈரோடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

Updated On : 27 பிப்ரவரி, 2023 at 9:34 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:07 PM

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் கடந்த 2 மணிநேரத்தில் 22,973 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் காக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாக்களித்தார். 

இந்தத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.