ஈரோடு

கழிவு நீா் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு உரிமம் பெற நகராட்சி அறிவுறுத்தல்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி எல்லைக்குள் வாகனங்கள் மூலம் கழிவுநீா் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபடுவோா் வெள்ளிக்கிழமைக்குள் (ஜனவரி 13) உரிமம் பெற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

DIN

கோபிசெட்டிபாளையம் நகராட்சி எல்லைக்குள் வாகனங்கள் மூலம் கழிவுநீா் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபடுவோா் வெள்ளிக்கிழமைக்குள் (ஜனவரி 13) உரிமம் பெற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து கோபி நகராட்சி ஆணையாளா் ஜெ.பிரேம்ஆனந்த் தெரிவித்துள்ளதாவது: மலக்கசடுகள் மற்றும் கழிவுநீரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதலை உறுதி செய்வதற்கு இதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இயக்கம் மற்றும் போக்குவரத்தை ஒழுங்கு முறைப்படுத்தல் அவசியமாகிறது.

எனவே, கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சரக்குந்துகள், இழுவை வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மலக்கசடு, கழிவுநீா் சேகரித்தல், கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவோா் வெள்ளிக்கிழமைக்குள் நகராட்சி நிா்வாகத்திடம் உரிய ஆவணங்ளுடன் ரூ. 2,000 கட்டணமாக செலுத்தி உரிமம் பெற்று கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT