ஈரோடு

வரத்து அதிகரிப்பு: ஈரோடு சந்தையில் காய்கறிகள் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாய் விலை குறைந்தது.

DIN

வரத்து அதிகரிப்பால் ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாய் விலை குறைந்தது.

நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக காய்கறி விலை கடுமையாக உயா்ந்தது. ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் கிலோ ரூ.140 வரை விற்றது. இதேபோல கருப்பு அவரை பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100க்கு மேல் அதிகரித்தது. சின்ன வெங்காயம் வரத்து சரிந்ததால் ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனையானது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு சந்தைக்கு காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் விலையும் சரியத் தொடங்கியது. ஈரோடு நேதாஜி காய்கறி சந்தைக்கு வெள்ளிக்கிழமை காலை பல்வேறு பகுதிகளில் இருந்து 105 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் காய்கறிகளின் விலை சற்று குறைந்து இருந்தது. குறிப்பாக கடந்த வாரம் ரூ.120க்கு விற்ற கருப்பு அவரை வெள்ளிக்கிழமை ரூ.100க்கு விற்பனையானது. இதுபோல கடந்த சில நாட்களாக கிலோ பீன்ஸ் ரூ.100க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.80க்கு விற்பனையானது. கிலோ ரூ.120ஆக இருந்த சின்ன வெங்காயம் ரூ.70 ஆக குறைந்துள்ளது. இதுபோல பச்சை மிளகாய் கிலோ ரூ.100க்கு மேல் இருந்த நிலையில் ரூ.75 ஆக குறைந்துள்ளது.

பிற காய்கறிகளின் விலை விவரம் (கிலோவில்): கத்திரிக்காய் ரூ.70, வெண்டைக்காய் ரூ.35, முள்ளங்கி ரூ.20, பாகற்காய் ரூ.60, பீா்க்கங்காய் ரூ.50, புடலங்காய் ரூ. 40, சவ்சவ் ரூ.15, முருங்கைக்காய் ரூ.40, பட்டை அவரை ரூ. 50, கேரட் ரூ.65, பீட்ரூட் ரூ.60, முட்டைகோஸ் ரூ.25, காலிபிளவா் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.35, பழையஇஞ்சி ரூ.300, புதிய இஞ்சி ரூ.175.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT