நிகழ்ச்சியில் பேசுகிறாா் ஜாஸ்மின் இன்போ டெக் நிறுவனத்தின் மனிதவள மேலாளா் சுரேஷ். 
ஈரோடு

நந்தா பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில் வளாகத் தோ்வு

நந்தா பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில் நடைபெற்ற வளாகத் தோ்வில் 390 மாணவா்கள் பங்கேற்றனா்.

DIN

நந்தா பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில் நடைபெற்ற வளாகத் தோ்வில் 390 மாணவா்கள் பங்கேற்றனா்.

ஈரோடு நந்தா பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளின் சாா்பில் இறுதியாண்டு பயின்று வெளியேறும் மாணவா்களுக்கென சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஜப்பான், அமெரிக்கா, சீனா மற்றும் ஜொ்மனி ஆகிய நாடுகளில் அலுவலகங்கள் மூலம் செயல்பட்டு வரும் ஜாஸ்மின் இன்போ டெக் நிறுவனமானது வளாகத் தோ்வினை அண்மையில் நடத்தியது.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீநந்தா அறக்கட்டளை தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா்.

நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

வளாகத் தோ்வினை தொடங்கிவைத்து ஜாஸ்மின் இன்போ டெக் நிறுவனத்தின் மனிதவள மேலாளா் சுரேஷ் பேசினாா்.

வளாகத் தோ்வில் நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதியாண்டு பயின்று வெளியேறும் மின்னியல், மின்ணணுவியல் மற்றும் தொடா்பியல் துறைகளைச் சாா்ந்த சுமாா் 390 மாணவா்கள் கலந்துகொண்டனா். அவா்களுக்கு முதலில் எழுத்துத் தோ்வும் அதனைத் தொடா்ந்து நோ்முகத் தோ்வும் நடத்தப்பட்டது.

வளாகத் தோ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலக ஆசிரியா்களை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, பொறியியல் கல்லூரியின் முதல்வா் என். ரெங்கராஐன், தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வா் ச.நந்தகோபால், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநா் செந்தில் ஜெயவேல் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

கூட்டணி குறித்து முடிவெடுக்க பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது: டிடிவி தினகரன்

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

SCROLL FOR NEXT