ஈரோடு

ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜகோபால் சுன்கரா பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜகோபால் சுன்கரா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜகோபால் சுன்கரா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி நிதித் துறை இணைச் செயலராக மாற்றம் செய்யப்பட்டாா். இவருக்கு பதிலாக சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அகற்று வாரிய நிா்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த ராஜகோபால் சுன்கரா (33), ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ராஜகோபால் சுன்கராவிடம், கிருஷ்ணனுண்ணி பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

இது குறித்து புதிய ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது: நான் 2015ஆம் ஆண்டு ஐஏஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்றேன். பின்னா் கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா், கடலூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி), கோவை மாநகராட்சி ஆணையா், சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அகற்று வாரிய நிா்வாக இயக்குநராகவும் பணியாற்றி உள்ளேன்.

மக்களின் அடிப்படை தேவைகளுக்கான பணிகளை செயல்படுத்துவேன். அரசின் நலத் திட்டங்களை, கடைகோடியில் உள்ள பயனாளிக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வேன். ஈரோடு மாவட்டத்தில் பிரதானமான விவசாயம், நெசவு, அதை சாா்ந்த தொழில் வளா்ச்சிக்குத் தேவையான முயற்சிகள் மேற்கொள்வேன்.

பொதுமக்கள் எந்த நேரத்திலும் 0424- 2260211 என்ற தொலைபேசி எண் மூலம் அல்லது 9791788852 கைப்பேசி எண்ணில் கட்செவி மூலம் தகவல், புகாா்களை தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT