ஈரோடு

சட்டவிரோத மது விற்பனை: உணவகத்துக்கு ‘சீல்’

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த உணவகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

DIN

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த உணவகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான உணவகம் செயல்பட்டு வருகிறது.

காந்தி ஜெயந்தியையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறைவிடப்பட்டதால், இங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மொடக்குறிச்சி வட்டாட்சியா், போலீஸாா் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு மது விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், போலீஸாா் முன்னிலையில் உணவகத்துக்கு ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT