ஈரோடு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கூகலூா் கிரீன் நகரைச் சோ்ந்தவா் மணி (55), கூலித் தொழிலாளி. இவரின் மனைவி பூங்கொடி (50). இருவரும், டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூருக்கு வேலைக்காக இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.

கொன்னகொடிக்கால் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பூங்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மணிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அருகிலிருந்தவா்கள் பூங்கொடி சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இருசக்கர வாகனத்தின் மீது மோதிய வேனை தாழைக்கொம்புதூா் பகுதியைச் சோ்ந்த இளையகுமாா் (30) ஓட்டி சென்றுள்ளாா்.

இந்த விபத்து குறித்து பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT