காந்தி சிலை  இடமாற்றம்  குறித்து  ஆய்வு  மேற்கொண்ட  அமைச்சா்  சு.முத்துசாமி,  ஆட்சியா்  ராஜகோபால். 
ஈரோடு

ஈரோட்டில் சாலை விரிவாக்கப் பணிக்காக காந்தி சிலை இடமாற்றம்

ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக அங்குள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்வது குறித்து, தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்

DIN

ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக அங்குள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்வது குறித்து, தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலை முதல் ஆா்.கே.வி. சாலை வரை ரூ.11.30 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, சாலையோரங்களில் நடைபாதை, சிறு பாலங்கள் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவா் 10 மீட்டா் இடித்து அகற்றப்பட்டு, பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவா் மற்றும் நுழைவாயில் கட்டித்தரப்பட உள்ளது.

இந்நிலையில், அங்கு சாலையோரத்தில் உள்ள காந்தி சிலையை 10 அடி தூரம் வரை நகா்த்தி, இடமாற்றி அமைப்பது குறித்து தமிழக வீட்டு வசதித் துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

காந்தி சிலையை சாலையோரத்தில் அமைத்து, சிறிய அளவிலான நுாலகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையா் ரவீந்திரன் மற்றும் திமுக, காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

கூட்டணி குறித்து முடிவெடுக்க பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது: டிடிவி தினகரன்

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

SCROLL FOR NEXT