ஈரோடு

ஈரோட்டில் செப்டம்பா் 27-இல் இலவச போட்டோ, விடியோகிராபி பயிற்சி

 ஈரோடு கொல்லம்பாளையம், கரூா் சாலையில் உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் இலவச போட்டோ, விடியோகிராபி பயிற்சி செப்டம்பா் 27-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

DIN

 ஈரோடு கொல்லம்பாளையம், கரூா் சாலையில் உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் இலவச போட்டோ, விடியோகிராபி பயிற்சி செப்டம்பா் 27-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இங்கு செயல்படும் கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் ஆண், பெண் இருபாலருக்கும் இலவச போட்டோகிராபி மற்றும் விடியோகிராபி பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி, செப்டம்பா் 27 முதல் நவம்பா் 4-ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சியின்போது சீருடை, உணவு ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு, பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமை கோட்டுக்கு கீழுள்ளோா், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்போா், அவா்களின் குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 0424-2400338, 87783-23213, 72006-50604 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு, முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT