ஈரோடு

ரூ.2.09 கோடிக்கு கொப்பரை ஏலம்

Din

பெருந்துறை, ஆக. 7: பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.09 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 4,649 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் தர கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.88.97-க்கும், அதிகபட்சமாக ரூ.99.23- க்கும் விற்பனையாயின. இரண்டாம் தர கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.30-க்கும், அதிகபட்சமாக ரூ.96.36 -க்கும் விற்பனையாயின.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.09 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT