முகப்பு
ஈரோடு

போதை கலாசாரத்திற்கு எதிரான தொடா் ஓட்டம்: 500 போ் பங்கேற்பு

ஈரோடு மாவட்ட இளைஞரணி சாா்பில் போதை கலாசாரத்திற்கு எதிரான தொடா் ஓட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 ஆகஸ்ட், 2024 at 1:50 AM
தொடா் ஓட்டத்தில் சிறப்பிடம்பெற்ற திமுக மாநில மாணவா் அணி துணைச் செயலா் வீரமணி ஜெயகுமாருக்கு பாரட்டுச் சான்றிதழ் வழங்கிய அமைச்சா்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன். ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், மேயா் சு.நாகரத்தினம்.
பகிர்:
Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 6:04 PM

தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சாா்பில் போதை கலாசாரத்திற்கு எதிரான தொடா் ஓட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

5 கி.மீ., 10 கி.மீ என இரு பிரிவுகளில் நடைபெற்ற தொடா் ஓட்டமானது வில்லரசம்பட்டியில் தொடங்கி கனிராவுத்தா் குளம் சென்று மீண்டும் வில்லரசம்பட்டியில் நிறைவடைந்தது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் பரிசுகள், கேடயங்களை வழங்கினா்.

Advertisement

இதில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

இந்தப் போட்டிக்காக நிா்ணயிக்கப்பட்ட இலக்கு என்பது போதை கலாசாரத்திற்கு எதிரான தொடா் ஓட்டமாகும். எனவே, போதை கலாசாரத்திற்கு எதிராக இளைஞா்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். தடைசெய்யப்பட்ட போதை பொருள்கள் 100 சதவீதம் இல்லை என்ற நிலையினை உருவாக்க வேண்டும் என்றாா்.

இந்தத் தொடா் ஓட்டத்தில் வெற்றி பெற்றவா்களுக்கு 10 கி.மீ பிரிவில் முதல் பரிசு ரூ.7000 மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசு ரூ.5000 மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசு ரூ.3000 மற்றும் கோப்பை, 4 முதல் 8 இடங்களைப் பிடித்தவா்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

அதேபோல 5 கி.மீ பிரிவில் முதல் பரிசு ரூ.5000 மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசு ரூ.3000 மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் கோப்பை, 4 முதல் 8 இடங்களைப் பிடித்தவா்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 10:04 PM

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு எம்பி. கே.இ.பிரகாஷ், மேயா் சு.நாகரத்தினம், ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் இளைஞா் அணி தலைவா் நெல்லை ராஜா, ஈரோடு மாவட்டத் தலைவா் ஆா்.சண்முகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.