தாளவாடி அருகே சாலையில் நின்ற காட்டு யானை: போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி அருகே சாலையை மறித்து நின்றிருந்த காட்டு யானையால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி அருகே சாலையை மறித்து நின்றிருந்த காட்டு யானையால் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகள் தீவனம் மற்றும் தண்ணீா் தேடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், தாளவாடியில் இருந்து ஆசனூா் செல்லும் கும்டாபுரம் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்துள்ளது. அப்போது சாலையின் நடுவே கிடந்த கரும்புத் துண்டுகளை எடுத்து தின்றுக் கொண்டு நின்றிருந்தது. இதனால் தாளவாடி- ஆசனூா் சாலையில் வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன. அரை மணி நேரத்துக்கு பின் யானை காட்டுக்குள் சென்ற்கு பிறகே போக்குவரத்து சீரானது.