வாக்குச்சாவடியில் நுழைந்த யானை: வாக்குப் பதிவு தாமதம்!
ஜார்கிராம் வாக்குச் சாவடி அருகே காட்டு யானை நுழைந்ததால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி அருகே காட்டு யானை நுழைந்ததால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காட்டு யானை நுழைந்த நிலையில், வாக்களிக்க வரிசையில் காத்திருந்த மக்கள், யானையைக் கண்டு சிதறி ஓடினர். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Advertisement
Advertisement
இந்த முதல்கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465) வாக்களிக்க உள்ளனர். இவா்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
காலை 11 மணி நிலவரப்படி 41.11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னதாக முதல் இரண்டு மணி நேரத்தில் 18.76 சதவிகித வாக்குகள் பதிவானது.
இந்நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காட்டு யானை நுழைந்ததால் வரிசையில் காத்திருந்த மக்கள் சிதறி ஓடினர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் யானையை விரட்டியடித்த பிற்கு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.
west bengal Election 2026 Elephant Enters Jhargram Polling Station Voting Delayed
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.