மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்குகிறாா் பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பெரியசாமி.  
ஈரோடு

காஞ்சிக்கோவில் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

Din

பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 107 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராவுத்தப்பன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் தினகரன் வரவேற்றாா். பெருந்துறை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பெரியசாமி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலவாணி தங்கமுத்து, காஞ்சிக்கோவில் நகர திமுக செயலாளா் செந்தில் முருகன், பள்ளபாளையம் நகர திமுக செயலாளா் தங்கமுத்து, மாவட்ட திமுக மகளிா் அணி தலைவி காந்திமதி, காஞ்சிக்கோவில் பேரூராட்சி முன்னாள் தலைவா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT