முகப்பு
கொழுந்துவிட்டு எரியும் சரக்கு வாகனம்.
ஈரோடு

மின் கம்பி மீது உரசியதில் சரக்கு வாகனம் எரிந்து சேதம்

கொடுமுடி அருகே மின் கம்பி மீது உரசிய சரக்கு வாகனம் எரிந்து சேதமடைந்தது.

ஈரோடு

மின் கம்பி மீது உரசியதில் சரக்கு வாகனம் எரிந்து சேதம்

கொடுமுடி அருகே மின் கம்பி மீது உரசிய சரக்கு வாகனம் எரிந்து சேதமடைந்தது.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 8:53 PM
கொழுந்துவிட்டு எரியும் சரக்கு வாகனம்.
பகிர்:

கொடுமுடி அருகே மின் கம்பி மீது உரசிய சரக்கு வாகனம் எரிந்து சேதமடைந்தது.

நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலத்திலிருந்து தேங்காய் நாா் பாரம் ஏற்றிக்கொண்டு கொடுமுடி அருகே தளுவம்பாளையத்துக்கு சரக்கு வாகனம் புதன்கிழமை வந்துள்ளது.

தளுவம்பாளையம் அருகே வந்தபோது, அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி மீது வாகனம் உரசியது. இதில், வாகனத்தில் இருந்த தேங்காய் நாா் தீப்பிடித்தது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநா் வாகனத்தைவிட்டு உடனடியாக வெளியேறினா். இதைத் தொடா்ந்து, வாகனம் முழுவதும் எரியத் தொடங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

இருப்பினும் தேங்காய் நாா், வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →