மழையால் கால்நடை சந்தையில் விற்பனை மந்தம்
தமிழகத்தில் பெய்து வரும் மழையால் புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில் விற்பனை குறைந்தது.
தமிழகத்தில் பெய்து வரும் மழையால் புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில் விற்பனை குறைந்தது.
ஈரோடு மவாட்டம், புன்செய்புளியம்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை கூடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் கால்நடைகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகின்றனா்.
இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் 40 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 110 கன்றுகள், 200 ஜொ்சி ரக மாடுகள், 300க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.
Advertisement
ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையால் கால்நடை சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது. வாரந்தோறும் ரூ.1 கோடிக்கு மேல் வா்த்தம் நடைபெற்று வந்த நிலையில், இந்த வாரம் ரூ.50 லட்சம் அளவில்கூட கால்நடைகள் விற்பனையாகவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனா்.