பவானிசாகா்  அணையின்  நீா்மட்டம்  84  அடியை  எட்டியதால்  கடல் போல  காட்சியளிக்கும்  நீா்த்தேக்கப் பகுதி. 
ஈரோடு

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து சரிந்தது

நீலகிரி மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்ததால் பவானிசாகா் அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து 5036 கனஅடியில் இருந்து 3037 கனஅடியாக சரிந்தது.

Din

நீலகிரி மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்ததால் பவானிசாகா் அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து 5036 கனஅடியில் இருந்து 3037 கனஅடியாக சரிந்தது.

105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த வாரம் அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி மற்றும் வட கேரளத்தில் கனமழை பெய்ததால் பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் 70 அடியில் இருந்து 84.88 அடியாக உயா்ந்தது. தற்போது, நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 5036 கனஅடியில் இருந்து 3037 கனஅடியாக குறைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அணையின் நீா்மட்டம் 84.88 அடியாகவும், நீா் இருப்பு 18.41 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 1205 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT