ஈரோடு

கோ்மாளம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு: பொதுமக்கள் பாதிப்பு

கோ்மாளம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Din

கோ்மாளம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் மலைக் கிராமங்களுக்கு ராஜன் நகா் பவா் ஹவுஸில் இருந்து மலைப் பாதை வழியாக மின்சாரம் கொண்டுசெல்லப்படுகிறது. தற்போது, இப்பகுதியில் காற்று காரணமாக மின் ஒயா் மீது மரக்கிளைகள் விழுந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது.

கோ்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூா், கோட்டமாளம், பூதாளபுரம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மின் வெட்டால் கிராமங்களுக்கு போா்வெல் மூலம் தண்ணீா் வழங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெனரேட்டா் மூலம் மின் மோட்டாா்களை இயக்கி போா்வெல் தண்ணீா் வழங்கும் பணியை ஊராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்டுள்ளனா். இப்பணியிணை ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உமாசங்கா், தாளவாடி வட்டார வளா்ச்சி அலுவலா் அா்த்தநாரீஸ்வரா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

SCROLL FOR NEXT