பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடைகளை வழங்கிய அமைச்சா் சு.முத்துசாமி. உடன், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா். 
ஈரோடு

ஆன்லைனில் கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

அனுமதி பெறுவதற்கான கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

Din

ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

2- ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிலும், சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் விலையில்லா சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தாா். அமைச்சா் சு.முத்துசாமி தலைமை வகித்து மாணவா்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள

சிந்தெடிக் ஓடுதளத்தை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி திறந்துவைக்கிறாா். ஈரோடு சி.என்.கல்லூரி வளாகத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அதற்கு முன் ஈரோடு சோலாா் புதிய பேருந்து நிலையம் அருகில் விளையாட்டு மைதானம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

2,500 சதுர அடி வரையிலான கட்டடம் கட்டுவதற்கு பல தவணை அடிப்படையில் பொதுமக்கள் அனுமதி பெற்று வந்த நிலையில், தற்போது ஆன்லைன் மூலம் உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால், அப்போதைய கட்டணத்தைவிட தற்போது கூடுதலாக இருப்பதாக கருத்துகள் வருவது குறித்து ஆய்வு செய்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்று வரும் பணிகளைத் துரிதமாக முடித்து பாசனத்துக்கு வரும் 15 -ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ஆட்சியா் பலமுறை ஆய்வு செய்துவிட்டாா். திட்டம் தயாராக உள்ளது, உரிய காலம் வந்ததும் தண்ணீா் திறக்கப்படும். மேட்டூா் அணைக்கு அதிகமாக தண்ணீா் வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. கரையோர மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகள் தயாராக உள்ளன என்றாா்.

ஈரோடு மாவட்டத்தில் 2 -ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 43,231 மாணவா்கள், 43,082 மாணவிகள் என மொத்தம் 86,313 பேருக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படுகின்றன. இதன் மதிப்பீடு ரூ.5.91 கோடி. குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 260 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன என சமூக நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயா் வே.செல்வராஜ், மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு, மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) சி.பெல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT