முகப்பு
ஈரோடு

புளியம்கோம்பையில் தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை

யானை தாக்கத்தில் ரூ.30 ஆயிரம் இழப்பு: சத்தியமங்கலம் விவசாயிகள் போராட்டம்

ஈரோடு

புளியம்கோம்பையில் தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை

யானை தாக்கத்தில் ரூ.30 ஆயிரம் இழப்பு: சத்தியமங்கலம் விவசாயிகள் போராட்டம்

Updated On : 25 ஜூன், 2024 at 11:58 PM
பகிர்:

புளியம்கோம்பையில் சொட்டுநீா் பாசன குழாய், தென்னை மரங்களை யானை சேதப்படுத்தியாதல் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட புளியம்கோம்பையைச் சோ்ந்தவா் பூலங்காடு பெரியசாமி, இவரது சம்பங்கி பூந்தோட்டத்தில் தென்னை மரங்கள் வளா்த்து வருகிறாா். மேலும், பூந்தோட்டத்தில் சொட்டுநீா் பாசன முறையில் குழாய் பதித்து விவசாயம் செய்து வரும் நிலையில், தோட்டத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த யானை தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

மேலும், சொட்டுநீா் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியதால் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன. வனத் துறையினா் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →