சென்னிமலை முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்
சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
சென்னிமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நம்பவா் 2-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி விழாவையொட்டி, தினமும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு யாக சாலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆணவத்தை அழித்து, சூரனை ஆட்கொள்ளும் சூரசம்ஹார விழா வியாழக்கிழமை இரவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு மலைக் கோயிலில் இருந்து சுவாமி மலை அடிவாரத்தில் எழுந்தருளி, சென்னிமலை நகர நான்கு ராஜ வீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரள்வாா்கள்.
Advertisement