வீரணம்பாளையம் அரசுப் பள்ளி மைதானத்துக்கு ரூ.8.25 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா்
பெருந்துறை ஒன்றியம், வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு ரூ.8.25 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் கட்டுவதற்கான கால்கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை ஒன்றியம், வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு ரூ.8.25 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் கட்டுவதற்கான கால்கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் வேலுசாமி தலைமை வகித்தாா்.
விழாவில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் நிதி ரூ.6.25 லட்சம், சீனாபுரம் கிராம ஊராட்சி நிதி ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.8.25 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானத்துக்கு தடுப்புச் சுவா் கட்டுமானப் பணியை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஏ.வி. பாலகிருஷ்ணன், பெருந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமலதா, பெருந்துறை ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் பால்சின்னசாமி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
Advertisement
இதில், சீனாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சுப்பிரமணியம், சீனாபுரம் ஊராட்சி துணைத் தலைவா் தமிழரசி, பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்க பொருளாளா் சென்னிமலை உள்பட பலா் கலந்துக் கொண்டனா். பள்ளி ஆசிரியா் கீதா நன்றி கூறினா்.