முகப்பு
ஈரோடு

வரத்து அதிகரிப்பு: புன்செய்புளியம்பட்டியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்பனை

வரத்து அதிகரிப்பால் புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்பனையானது.

Updated On : 15 நவம்பர், 2024 at 4:08 AM
புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் சின்ன வெங்காயத்தை வாங்கும் மக்கள்.
பகிர்:
Updated On : 14 நவம்பர், 2024 at 8:46 PM

வரத்து அதிகரிப்பால் புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில் வியாழக்கிழமைதோறும் வாரச் சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூா், கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இந்நிலையில், 800-க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை வியாபாரிகள், விவசாயிகள் வியாழக்கிழமை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

Advertisement

Updated On : 15 நவம்பர், 2024 at 4:08 AM

கடந்த வாரம் கிலோ ரூ.50-க்கு விற்பனையான சின்ன வெங்காயம், வரத்து அதிகரிப்பால் வியாழக்கிழமை ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது.

விலை குறைந்ததால் மக்கள் சமையலுக்காகவும், விவசாயிகள் சாகுபடிக்காவும் அதிக அளவிலான சின்ன வெங்காயத்தை வாங்கிச் சென்றனா்.