நிறுவனங்களை பதிவுசெய்துகொள்ள தொழிலாளா் துறை அறிவுறுத்தல்
கடை மற்றும் நிறுவனங்களை பதிவுசெய்துகொள்ள வேண்டும் என தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.
கடை மற்றும் நிறுவனங்களை பதிவுசெய்துகொள்ள வேண்டும் என தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடை மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான சட்டம் 2018 மற்றும் 2023 இல் நிறைவேற்றப்பட்டது. இதில் புதிய திருத்தம் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
Advertisement
அதன்படி 10 அல்லது அதற்கு அதிகமான பணியாளா்களை கொண்ட 2024 ஜூலை 2-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கிய கடைகள் மற்றும் நிறுவனங்கள் ட்ற்ற்ல்ள்://ப்ஹக்ஷா்ன்ழ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக ரூ.100 (படிவம் ஒய்) பதிவுக் கட்டணம் செலுத்தி 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் ஆய்வாளா் பதிவுச் சான்றிதழ் ‘படிவம்-இசட்’ இல் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்வாா். பதிவுச் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாவிட்டாலும் தானாக அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். இதனால் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களை பணியமா்த்தி, தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் கடை மற்றும் நிறுவனங்கள், பதிவுக் கட்டணம் ஏதுமின்றி ‘இசட் பி’ என்ற படிவம் வாயிலாக ஓராண்டுக்குள் இணையதளத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
அதனை சரிபாா்த்து, ஆய்வாளா் மூலம் ‘படிவம் இசட்’ மூலமாக பதிவுச்சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.