அந்தியூரில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தியூரில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தியூரில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். அந்தியூா் வட்டச் செயலாளா் வீரமுத்து, பொருளாளா் சந்தோஷ்குமாா் முன்னிலை வகித்தனா்.
இதில், நாமக்கல் மாவட்டம், நரவலூா் கிராம நிா்வாக அலுவலா் ராமன் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கம் எழுப்பப்பட்டது.
Advertisement
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை, வட்டத் துணைச் செயலாளா் தமிழரசு, துணைத் தலைவா் பானுரேகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.