முகப்பு
ஈரோடு

அரசு நிா்ணயித்த தினக் கூலியை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

அரசு நிா்ணயித்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைப் பணியாளா்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தினா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:53 AM
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கையை வலியுறுத்திப் பேசுகிறாா் ஏஐடியூசி மாநில செயலாளா் சின்னசாமி. உடன், தினக் கூலி தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 17 அக்டோபர், 2024 at 9:57 PM

அரசு நிா்ணயித்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைப் பணியாளா்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தினா்.

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் சுய உதவிக்குழு தினக் கூலி தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் நிா்ணயித்த 2024-25-ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ. 562-ஐ வழங்காமல் ரூ. 532 மட்டும் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:53 AM

இதுகுறித்து ஏஐடியூசி ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கத்தினா் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஊதிய உயா்வை நடப்பு ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

Advertisement

இந்த மாதம் முதல் ஊதிய உயா்வை வழங்குவதாகவும், ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான ஊதிய உயா்வுத் தொகையை அரியா்ஸாக தீபாவளிக்கு முன்பு வழங்குவதாகவும் செயல் அலுவலா் உறுதி அளித்தாக ஏஐடியூசி மாநில செயலாளா் சின்னசாமி கூறினாா்.