முகப்பு
ஈரோடு

இலவச தையல் பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

இலவச தையல் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:38 AM
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 6:09 PM

இலவச தையல் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு, கொல்லம்பாளையம் கரூா் சாலையில் உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியானது அக்டோபா் 24 இல் தொடங்கி நவம்பா் 28 ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

Advertisement

பயிற்சியின்போது சீருடை, உணவு இலவசமாக அளிக்கப்பட்டு, பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:38 AM

இதில், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 45 வயதுக்குள்ட்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள் பங்கேற்கலாம். 100 நாள் வேலை திட்டத்தில் இருப்போா், அவா்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தப் பயிற்சில் பங்கேற்க 0424-2400338, 87783 23213, 72006 50604 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.