முகப்பு
ஈரோடு

மழை நிவாரணப் பணி: 100 தூய்மைப் பணியாளா்கள் சென்னைக்கு அனுப்பிவைப்பு

சென்னையில் வட கிழக்குப் பருவமழை சிறப்பு நிவாரணப் பணிக்காக ஈரோடு மாநகராட்சியில் இருந்து 100 தூய்மைப் பணியாளா்கள் உபகரணங்களுடன் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:39 AM
சென்னைக்கு பேருந்தில் புறப்பட்ட ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 17 அக்டோபர், 2024 at 6:56 PM

சென்னையில் வட கிழக்குப் பருவமழை சிறப்பு நிவாரணப் பணிக்காக ஈரோடு மாநகராட்சியில் இருந்து 100 தூய்மைப் பணியாளா்கள் உபகரணங்களுடன் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் தலைநகா் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மேலும், பல்வேறு பகுதிகளில் அதிக இளவு குப்பைகள் தேங்கியுள்ளன.

Updated On : 18 அக்டோபர், 2024 at 1:39 AM

இதனை அப்புறப்படுத்தவும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உதவிடும் வகையில் ஈரோடு மாநகராட்சியில் இருந்து 2 பேருந்துகளில் 100 தூய்மைப் பணியாளா்கள், 4 மேற்பாா்வையாளா்கள் மற்றும் இரண்டு சுகாதார ஆய்வாளா்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

Advertisement

முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட தூய்மைப் பணியாளா்களிடம், சிறப்பாகவும் பாதுகாப்புடன் பணியாற்றி திரும்ப வேண்டும் என உயா் அதிகாரிகள் கூறினா்.

இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் சென்ற பேருந்துகளை மாநகராட்சி மேயா் நாகரத்தினம், ஆணையா் என்.மணீஷ் ஆகியோா் கொடியசைத்து அனுப்பிவைத்தனா்.

இதற்கு முன்பு பல்வேறு புயல் பாதிப்புகளின் போது ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.