20 % போனஸ் வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை
ஈரோடு மாநகராட்சியில் 240 நாள்கள் பணி முடித்த குழு பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாநகராட்சியில் 240 நாள்கள் பணி முடித்த குழு பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் எண்.மணீஷிடம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஈவிகே.சண்முகம் அளித்த மனு விவரம்:
ஒரு ஆண்டில் 240 நாள் பணி செய்திருந்தால் குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும். 2 ஆண்டுகளில் 480 நாள் பணி முடித்திருந்தால் ஊழியரை பணி நிரந்தரம் செய்து, அனைத்து சலுகைகளையும் வழங்கி, பணிப் பாதுகாப்புடன் தகுந்த ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளா் நலச்சட்டம் கூறுகிறது.
Advertisement
எனவே, டாஸ்மாக் ஊழியா்களுக்கு போனஸ் வழங்குவதுபோல ஈரோடு நகராட்சியில் 240 நாள்கள் பணி முடித்த குழு பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் சட்டப்படியான சலுகைகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.