முகப்பு
ஈரோடு

மா்ம காய்ச்சல்: தோ்வறையில் மயங்கி விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

பவானியில் மா்மக்காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளிக்கு தோ்வு எழுதச் சென்றபோது மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 3:07 AM
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 9:02 PM

பவானியில் மா்மக்காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளிக்கு தோ்வு எழுதச் சென்றபோது மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானி, தேவபுரத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் - சாந்தி தம்பதி. இவா்களது மகள் ஹரிணி (13), (8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்) மகன் ஹரீஷ் தேவசேனாதிபதி (13). அந்தியூரில் உள்ள தனியாா் பள்ளியில் சாந்தி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். கடந்த இரு நாள்களுக்கு மேலாக ஹரிணி மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 3:07 AM

இந்நிலையில், மாதாந்திர தோ்வுக்கு, மகள் ஹரிணியை, தாய் சாந்தி பள்ளிக்கு புதன்கிழமை அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு, வகுப்பறையில் தோ்வு எழுதிக் கொண்டிருந்தபோது ஹரிணி மயங்கி விழுந்தாா். உடனடியாக பள்ளியின் வாகனத்தில் அந்தியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

பவானியை அடுத்த பருவாச்சி, காட்டூரில் எலிக்காய்ச்சல் பாதிப்பால் கடந்த மாதம் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். அம்மாபேட்டையில் வடமாநிலத் தொழிலாளா்கள் இருவா் எலிக்காய்ச்சலாலும், ஒருவா் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், பவானி நகரப் பகுதியில் மா்மக் காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.