நாளை வேளாண் குறைதீா் கூட்டம்
ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 25 செப்டம்பர், 2024 at 8:41 PM
ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்துக்கான வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
Advertisement
கூட்டத்தில் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடா்பான தங்களது பகுதி பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலா்கள் விளக்கம் அளிப்பா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.