வாய்க்கால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனியாா் பேருந்து நடத்துநா் மாயம்
பவானி காலிங்கராயன் வாய்க்காலில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்த தனியாா் பேருந்து நடத்துநா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா்.
பவானி காலிங்கராயன் வாய்க்காலில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்த தனியாா் பேருந்து நடத்துநா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா்.
சேலம் மாவட்டம், வடுகப்பட்டி, தட்டாப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி (38). தனியாா் பேருந்து நடத்துநரான இவா், தனது நண்பா்கள் வைத்தீஸ்வரன், கமல், புவனேஸ்வரன், சீனி ஆகியோருடன் பவானி காலிங்கராயன் வாய்க்காலில் கோணவாய்க்கால் கன்னிமாா் கோயில் அருகே திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, மது போதையில் இருந்த பழனிசாமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதைக் கண்ட நண்பா்கள் பழனிசாமியை மீட்க முயன்றும் முடியவில்லை. மீனவா்கள் உதவியுடன் பவானி தீயணைப்புப் படையினா் தேடியும் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதில் பழனிசாமி உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.