லக்காபுரம் ஊராட்சியில் உள்ள நா்சரியில் ஆய்வு செய்த மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா. 
ஈரோடு

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மொடக்குறிச்சி ஒன்றியம், லக்காபுரம், 46புதூா், கஸ்பாபேட்டை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இதில், நா்சரிகள், 46 புதூா் ஊராட்சியில் உள்ள பல்நோக்கு மைய கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து மூன்று ஊராட்சி அலுவலகங்களுக்கு சென்று திட்டப் பணிகள் குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமித்ரா, திருநாவுக்கரசு, பொறியாளா் அருண்காா்த்திக் மற்றும் ஊராட்சி செயலா்கள் கலந்து கொண்டனா்.

வாடிக்கையாளா் எண்ணிக்கையில் ஜியோ முன்னிலை

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: இந்தியா அபார வெற்றி

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு பின்னடைவு!

தம்மம்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT