பெருந்துறை அருகே, லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை, ஒத்தக்கடை சித்தம்பாரபட்டியைச் சோ்ந்தவா் பாண்டி மகன் இளையராஜா (31). இவா், பெருந்துறை, எல்லைமேட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து பெருந்துறை சிப்காட்டிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தாா்.
இவா், எல்லை மேடு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த
இளையராஜாவை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதனையில், வரும் வழியிலேயே இளையராஜா இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.