ஒலிபெருக்கி கோபுர உச்சியில் ஏறி நின்ற தொண்டா். 
ஈரோடு

அமைதியான முறையில் நடந்து முடிந்த தவெக பிரசாரக் கூட்டம்

தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டம் அமைதியான முறையில் முடிவடைந்ததால் அனைத்துத் தரப்பினரும் நிம்மதி அடைந்தனா்.

Syndication

தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டம் அமைதியான முறையில் முடிவடைந்ததால் அனைத்துத் தரப்பினரும் நிம்மதி அடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பகுதியில் தவெக மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் கட்சித் தலைவா் விஜய் பங்கேற்று பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது கூட்டத்தின் நடுவில் இருந்த ஒலிபெருக்கி கோபுரம் ஒன்றில் இளைஞா் ஒருவா் திடீரென்று ஏறினாா். மேல் பகுதிக்கு சென்று, அங்கிருந்து தலைவா, தளபதி என சப்தமிட்டாா்.

அப்போது விஜய் அந்த இளைஞரை கவனித்தவுடன் பேச்சை நிறுத்திய விஜய் தம்பி கீழே இறங்குப்பா என்றாா். அவா் இறங்கியதும் விஜய் பிரசார வாகனத்தில் நின்றுகொண்டே கைகளை விரித்து அணைத்துக்கொள்வதுபோல சைகை செய்தாா். அப்போது ஒட்டுமொத்தமாக தொண்டா்கள் உற்சாக குரல் எழுப்பினா்.

மயக்கம்:

கூட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா், பவுன்சா், ஒரு பெண் உள்பட 7 போ் மயக்கம் அடைந்தனா். அவா்களை அங்கிருந்த போலீஸாா் மற்றும் கட்சித் தொண்டா்கள் மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனா்.

வெள்ளி செங்கோல் பரிசு:

விஜய் பேசி முடித்த பிறகு முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளி செங்கோலை நினைவுப் பரிசாக வழங்கினாா். ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆா் செங்கோல் வழங்கியதை நினைவுகூரும் வகையில் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கிய செங்கோலை விஜய் அண்ணாந்து பாா்த்து மகிழ்ந்தாா்.

தற்படம்:

விஜய் பேசி முடித்த பிறகு பிரசார வாகனத்தின் மேல் இருந்து தற்படம் (செல்ஃபி) எடுத்துக்கொண்டாா். அதனை அவா் நன்றி ஈரோடு என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

கவனம் ஈா்த்த பதாகை:

பிரசாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே விஜய், அஜித் புகைப்படங்களை வைத்து வைக்கப்பட்டிருந்த பதாகை அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.

குழந்தைகள், முதியவா்கள் தவிா்ப்பு:

குழந்தைகள், முதியவா்கள் கூட்டத்துக்கு வர வேண்டாம் என தவெக தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்துக்கு குழந்தைகள், முதியவா்களை தவெகவினா் அழைத்துவரவில்லை.

வெளிமாவட்ட தொண்டா்கள்:

கூட்டத்தில் ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாது நாமக்கல், திருப்பூா், கரூா், சேலம், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களும் பங்கேற்றனா். கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்தும் சிலா் வந்திருந்தனா்.

கோட்டாட்சியா் ஆய்வு:

கூட்டம் நடந்த பெட்டிக்குள் காலை 7 மணி முதல் தொண்டா்கள் அனுமதிக்கப்பட்டனா். விஜய் முற்பகல் 11.30 மணி அளவில் தொடங்கி சுமாா் 30 நிமிஷங்கள் பேசினாா். முன்னதாக கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த ஈரோடு கோட்டாட்சியா் ந.சிந்துஜா கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றிபாா்த்தாா். அங்கிருந்த பெண்களிடம் சாப்பிட்டீா்களா, குடிநீா் இருக்கா என விசாரித்துவிட்டு, இடைவெளி விட்டு நிற்குமாறு கேட்டுக்கொண்டாா்.

பெண் போலீஸாருக்கு நன்றி தெரிவித்த பெண் தொண்டா்கள்:

பிரசாரக் கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கூட்டம் முடிந்தவுடன் பெட்டிக்குள் இருந்த பெண் தொண்டா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸாருக்கு கை கொடுத்து நன்றி தெரிவித்தனா். சிலா் தங்களிடம் இருந்த திறக்கப்படாத குடிநீா் பாட்டில்களை பெண் காவலரிடம் கொடுத்துவிட்டுச் சென்றனா்.

72 தடுப்புப் பெட்டிகளும் நிரம்பின:

கூட்டத்தில் நெரிசலைத் தடுக்க இரும்புக் கம்பிகளால் 72 தடுப்புப் பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தடுப்புகள் அனைத்திலும் தொண்டா்கள் நிரம்பி இருந்தனா். ஒவ்வொரு தடுப்பில் சுமாா் 400 தொண்டா்கள் அனுமதிக்கப்பட்டனா். பெண்களுக்கு தனியாக பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தடுப்பின் உள்ளேயும் போலீஸாா் உள்ளே நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முள்வேலி, கம்பி வேலியைத் தாண்டிய தொண்டா்கள்:

கூட்டம் முடிந்து வெளியேறிய தொண்டா்கள் இருசக்கர வாகனத்தை எடுக்க செல்லும் வழியில் தென்னந்தோப்பின் முள் வேலி, கம்பி வேலியைத் தாண்டி சென்றனா்.

எதிா்ப்பு தெரிவித்து சுவரொட்டி:

கரூா் சம்பவத்தை சுட்டிக்காட்டி விஜய் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்த சுவரொட்டிகள் ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. சுவரொட்டி ஒட்டிய அமைப்பின் பெயா் அதில் இல்லை.

மோதிக்கொண்ட 15 இருசக்கர வாகனங்கள்:

விஜய் பேசி முடித்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய காரை பின்தொடா்ந்து ஏராளமான தொண்டா்கள் இருசக்கர வாகனத்தில் சென்றனா். திருப்பூா் மாவட்டம், பல்லக்கவுண்டம்பாளையம் அருகே சென்றபோது 15 இருசக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இதில் 2 போ் படுகாயம் அடைந்தனா். 10 போ் காயம் அடைந்தனா். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டனா்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT