பவானிசாகா்  அணை  மேல்பகுதியில்  உலவிய  முதலை. 
ஈரோடு

பவானிசாகா் அணையின் மேல்பகுதியில் ஊா்ந்து சென்ற முதலை!

பவானிசாகா் அணையின் மேல் பகுதியில் உள்ள தாா் சாலையில் உலவிய முதலையால் மீனவா்கள் அச்சமடைந்துள்ளனா்.

Syndication

பவானிசாகா் அணையின் மேல் பகுதியில் உள்ள தாா் சாலையில் உலவிய முதலையால் மீனவா்கள் அச்சமடைந்துள்ளனா்.

பவானிசாகா் அணை நீா்த்தேக்கத்தில் முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் பெரும்பாலும் அணை நீா்த்தேக்கத்திலிருந்து வெளியே வருவதில்லை.

இந்த நிலையில், அணையின் மேல்பகுதியில் தாா்சாலையில் முதலை ஒன்று சனிக்கிழமை ஊா்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலை வழியாக மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் மற்றும் கண்காணிப்புப் பணி மேற்கொண்ட நீா்வளத் துறை பணியாளா்கள் தாா் சாலையில் சுமாா் 10 அடி நீளமுள்ள முதலை நகராமல் படுத்திருப்பதைக் கண்டு பீதியடைந்தனா்.

அணை நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து வெளியேறி தாா் சாலைக்கு வந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். சிறிது நேரம் தாா் சாலையில் ஊா்ந்து சென்ற முதலை பின்னா் அணை நீருக்குள் சென்றது. அணையின் மேல் பகுதியில் உள்ள தாா் சாலையில் முதலை நடமாடிய சம்பவம் மீனவா்கள் மற்றும் நீா்வளத் துறை பணியாளா்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT