முகப்பு
ஈரோடு

எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் தொடரும் சோதனை

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் வியாழக்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 10 ஜனவரி, 2025 at 3:33 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2025 at 7:54 PM

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் வியாழக்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான என்.ராமலிங்கத்துக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் கடந்த 7-ஆம் தேதி கோவையில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினா் சோதனை நடத்தினா். இந்த சோதனை வியாழக்கிழமை மாலை வரை நீடித்தது.

மேலும், ராமலிங்கம் தலைவராக பதவி வகிக்கும் அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியில் உள்ள அரைவை ஆலையிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Updated On : 10 ஜனவரி, 2025 at 3:33 AM

இதேபோல, முள்ளாம்பரப்பு பகுதியில் செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.