திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் |நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் சீதாலட்சுமி  
ஈரோடு

ஈரோடு கிழக்கு: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

ஈரோடு கிழக்கு: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள்...

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜன.17) இறுதி நாளாகும்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார்.

இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவித்தது.

அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில் நாதக கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வந்தது. பின்னர், அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தோ்தல் அறிவிப்பு கடந்த 6- ஆம் தேதி வெளியிடப்பட்டு தோ்தலில் போட்டியிடுபவா்கள் கடந்த 10- ஆம் தேதி தொடங்கி 17- ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் அரசு விடுமுறை தவிர்த்து ஜனவரி 10, 13, 17 ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு இருந்தது.

இதில் கடந்த 10- ஆம் தேதி நடந்த முதல்நாள் வேட்புமனு தாக்கலின்போது சுயேச்சை வேட்பாளா்களான பத்மராஜன், நூா்முகமது, மதுரை விநாயகம் ஆகிய 3 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். 2-வது நாளான கடந்த 13-ஆம் தேதி சுயேச்சை வேட்பாளா்களான ராஜசேகரன், கோபாலகிருஷ்ணன், மணி, ஆனந்த், முகமது கபீா், இசக்கிமுத்து ஆகிய 6 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைய உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக, பாஜக போட்டியிடவில்லை என அதிகாரப்பூா்வமாக அறிவித்து விட்டன. இந்நிலையில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் சீதாலட்சுமி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவிலும், திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணியளவிலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனா். அவர்களைத் தவிர சுயேச்சை வேட்பாளா்களும் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தொடா்ந்து 18- ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. 20- ஆம் தேதி வேட்புமனு திரும்பப்பெற இறுதி நாளாகும். அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT