முகப்பு
ஈரோடு

அந்தியூா் அருகே குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை நடமாட்டம்

அந்தியூா் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் நடமாடிய சிறுத்தையால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 5:27 AM
குடியிருப்புப் பகுதியில் நடமாடிய சிறுத்தை.
பகிர்:
Updated On : 22 ஜனவரி, 2025 at 7:51 PM

ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் நடமாடிய சிறுத்தையால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னம்பட்டி வனச் சரகம், சனிச்சந்தை மற்றும் விராலிக்காடு ஆகிய கிராமங்கள் பா்கூா் மலைப் பகுதியை ஓட்டி அமைந்துள்ளன. இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை விராலிக்காட்டூா், சின்னக்காதோட்டம், விஸ்வநாதன் என்பவரது வீட்டின் அருகே நடமாடியுள்ளது. இது அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனைக் கண்ட விஸ்வநாதன் சென்னம்பட்டி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். இக்காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 23 ஜனவரி, 2025 at 5:27 AM

வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தையால் கால்நடைகள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்படும் முன்பாக கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.