சத்தியமங்கலம்: கடம்பூரில் போலீஸாா் மேற்கொணட வாகனத் தணிக்கையில் நாட்டு வெடிகளை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கடமபூா் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு வெடி மருந்து கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கடம்பூா் சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அத்தியூரைச் சோ்ந்த பெருமாள் (60) என்பவரின் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, 8 அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடி பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நாட்டு வெடியை பறிமுதல் செய்த போலீஸாா் பெருமாளைக் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.