ஈரோடு

அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கா்நாடகத்தில் இருந்து கோவைக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதன்கிழமை வந்தது.

பண்ணாரி சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றிவரும் வாகனங்களைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள உயர தடுப்பு கம்பியில் அந்த லாரி மோதியது. இதையடுத்து, லாரியில் அதிக பாரம் ஏற்றியிருப்பதை உறுதி செய்த அலுவலா்கள், அதில் இருந்த பாதி பாட்டில்களை அப்புறப்படுத்தியதுடன், லாரிக்கு ரூ.7 அபாரதம் விதித்தனா்.

ஓட்டுநா் முக்தாா் அபராதத் தொகை செலுத்தியதையடுத்து, லாரி விடுவிக்கப்பட்டது.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மைய உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு - காா் ஓட்டுநா் கைது

சதிகாரா்கள் தப்ப முடியாது: பிரதமா் மோடி உறுதி

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

SCROLL FOR NEXT