பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 205 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பெருந்துறை நகா்மன்றத் தலைவா் ஓ.சி.வி. ராஜேந்திரன் கலந்து கொண்டு, பள்ளி மாணவா்கள் 205 பேருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இதில், பெருந்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் காமராஜ், சித்திக் அலி உள்பட பலா் கலந்து கொண்டனா்.