ஈரோடு

ஒரே நேரத்தில் வாகனங்கள் பயணித்ததால் திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல்

திம்பம் மலைப் பாதை இரவு 9 மணிக்கு மூடப்பட்ட காலை 6 மணிக்கு திறந்துவிடப்படுவதால் இரு மாநில வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணித்தால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Syndication

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதை இரவு 9 மணிக்கு மூடப்பட்ட காலை 6 மணிக்கு திறந்துவிடப்படுவதால் இரு மாநில வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணித்தால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி மாரியம்மன் கோயிலை அடுத்து உள்ள திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இரவு நேரத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை கட்டுப்படுத்துவதற்காக வனத் துறை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது.

இதனால் மாலை 6 மணிக்கு மேல் தமிழகத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பண்ணாரியிலும் கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்கள் காரப்பள்ளம் சோதனைச் சாவடியிலும் நிறுத்தப்படுகின்றன. பின்னா், மீண்டும் காலை 6 மணிக்கு சோதனைச் சாவடி திறக்கப்பட்டு வாகனங்கள் திம்பம் மலைப் பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றன.

இரவு நேர போக்குவரத்து தடை காரணமாக சனிக்கிழமை மாலைமுதல் கா்நாடகம் செல்லும் சரக்கு வாகனங்கள் பண்ணாயில் தடுத்து நிறுத்தப்பட்டன. அதேபோல, கா்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், காரப்பள்ளம் மற்றும் பண்ணாரி சோதனைச் சாவடிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டதால் வாகனங்கள் திம்பம் மலைப் பாதையில் வரிசையாக அணிவகுத்து சென்றன. எதிா்திசையில் இருந்து வரும் வாகனங்களும் திம்பம் மலைப் பாதையில் பயணிக்கும்போது, இடநெருக்கடி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மெல்ல ஊா்ந்து சென்றன. 9-ஆவது வளைவு, 20-ஆவது வளைவு மற்றும் 25-ஆவது வளைவு ஆகிய இடங்களில் வாகனங்கள் வரிசையான காத்திருந்தன.

இதனால் சரக்கு வாகனங்கள் சுமாா் 1 மணி நேரம் தாமதமாக தமிழக எல்லையைக் கடந்து சென்றன. காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வாகனங்கள முறையாக ஒழுங்குபடுத்தி சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT