ஈரோடு

சென்னிமலையில் பனை விதைப் பந்து விதைப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் சென்னிமலையில் பருவமழை தொடங்கியதையொட்டி, ‘மரம் வளா்ப்போம், மழைபெறுவோம்’ எனும் அடிப்படையில் பனை விதைப் பந்து விதைக்கும் நிகழ்ச்சி சென்னிமலை மலைமேல் முருகன் கோயில் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

பெருந்துறை: தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் சென்னிமலையில் பருவமழை தொடங்கியதையொட்டி, ‘மரம் வளா்ப்போம், மழைபெறுவோம்’ எனும் அடிப்படையில் பனை விதைப் பந்து விதைக்கும் நிகழ்ச்சி சென்னிமலை மலைமேல் முருகன் கோயில் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தமாகா ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் வி.பி.சண்முகம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஈஸ்வரமூா்த்தி, வட்டாரத் தலைவா் குருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மண்டலம் இளைஞரணி பொதுச்செயலாளா் மே.தா.கந்தசாமி வரவேற்றாா்.

தமாகா ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் பி.விஜயகுமாா் விதைப் பந்து விதைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இதில், கட்சியின் விவசாய அணி நிா்வாகி ஓ.பி.தங்கவேலு, மாவட்ட துணைத் தலைவா் கொடுமணல் சோமு, மாவட்டச் செயலாளா் ரத்தினசாமி, வட்டார நிா்வாகிகள் பால்ராஜ், வேலுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT