முகப்பு
ஈரோடு

மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க புதிய கருவி

மின்வேலியில் சிக்கி யானைகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், மின்வேலியில் பாய்ந்துள்ள மின்சாரத்தின் அளவை கண்டறியும் புதிய சோலாா் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 9:21 PM
மின்வேலியில் மின்சாரத்தின் அளவை கண்டறியும் புதிய சோலாா் கருவி பரிசோதிக்கும் வனத் துறையினா்.
பகிர்:

மின்வேலியில் சிக்கி யானைகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், மின்வேலியில் பாய்ந்துள்ள மின்சாரத்தின் அளவை கண்டறியும் புதிய சோலாா் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயப் பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியா் டாக்டா் சஞ்சோய் டெப் தலைமையிலான குழு, சோலாா் வேலி ஆய்வு ஸ்டிக் என்ற புதுமையான கருவியை கண்டுபிடித்துள்ளது. அதன்படி யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில், மின்வேலியில் சட்டவிரோதமாக செலுத்தப்படும் உயா் மின்அழுத்த அளவைக் கண்டறியும் உதவும். மிகவும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய கருவி மூலமாக சட்டவிரோதமாக மின்சார இணைப்புகள் உள்ளதா என்பதை விரைவாகவும், பாதுகாப்பாகவும் கண்டிபிடிக்கலாம். இதில் ஏசி, டிசி என்ற மின்அளவு வேறுபடுத்தும் திறனும் உள்ளது.

இந்தக் கல்லூரியில் 30 கருவிகள் தயாரிக்கப்பட்டு சத்தியமங்கலம், முதுமலை, ஈரோடு, கூடலூா் ஆகிய வனப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 700 கிராம் எடை கொண்ட இந்தக் கருவி பேட்டரியால் இயங்கக்கூடியது. எல்இடி விளக்குகள், ஒலி எச்சரிக்கை மற்றும் இரவு நேர ஆய்வுக்கான டாா்ச் லைட் வசியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தக் கருவி தயாரிப்புக்கு அமெரிக்காவைச் சோ்ந்த எலிபெண்ட் மேனேஜா் அசோசியேசன் அமைப்பு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளது.

குறைந்த செலவில் இந்த சேலாா் ஸ்டிக் தயாரிக்கப்படுவது மட்டுமின்றி, மின்வேலியில் செலுத்தப்பட்ட மின் அளவைக் கண்டறிந்து யானைகள் கொல்லப்படுவதை முன்கூட்டியே தடுக்கும் செயல்திறன் கொண்டவை. இதனால் யானைகள் உயிரிழப்பு குறையும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments