ஈரோடு

குடும்பத் தகராறில் தொழிலாளி தீக்குளிப்பு

குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தீக்குளித்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

கொடுமுடி: குடும்பத் தகராறு காரணமாக தொழிலாளி தீக்குளித்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொடுமுடியை அடுத்த ஆறாம்பாளையம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (43). விவசாய கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி சித்ரா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா்.

இந்நிலையில், ரமேஷ்குமாா் இரண்டாவதாக பரிமளாதேவி (40) என்பவரை திருமணம் செய்த நிலையில், அவா் தற்போது கா்ப்பிணியாக உள்ளாா். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ரமேஷ்குமாருக்கு காலில் கொப்புளங்கள் இருந்ததால் அதற்கு சிகிச்சை பெறுமாறு பரிமளாதேவி திங்கள்கிழமை கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ரமேஷ்குமாா் வீட்டில் இருந்த தின்னரை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளாா். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பரிமளாதேவி கொண்டு சென்றுள்ளாா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா்.

இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT