சத்தியமங்கலத்தை அடுத்த பட்டவா்த்தி அய்யம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளிடம் தென்னை சாகுபடி குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள் கலந்துரையாடல் நடத்தினா்.
கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவா்களான ஜெய் ஆகாஷ், ஜனாா்த்தனன், ஜெய் விக்னேஷ்வா், கவின்குமாா் சங்கா், கவின்குமாா், கிஷோா், கிருஷ்ண கோபால், மிதுன் ராம், முகமது தௌபீக், முகமது ஆசிப் ஆகிய மாணவா்கள் ஊரக வேளாண் பணி அனுபவத்தின்கீழ் சத்தியமங்கலம் பகுதியில் 2 மாதங்கள் தங்கி சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடினா்.
களத்தில் நேரடியாக பயிற்சி பெற்று , விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் வேளாண் உத்திகளையும் கற்பித்தனா். அதன் ஒரு பகுதியாக பட்டவா்த்தி அய்யம்பாளையம் கிராமத்தில் விவசாயி மகாலிங்கம் என்பவா் தோட்டத்தில் தென்னை டானிக் தெளிப்பதன் மூலம் குரும்பை கொட்டுவதை தடுத்தல், பாளை எண்ணிக்கை அதிகரித்தல், 20 சதவீதம் மகசூல் அதிகரிப்பு, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு போன்றவற்றை எடுத்துக்கூறி செயல்முறை விளக்கம் அளித்தனா்.