தாா் சாலை பணியை தொடங்கிவைத்த மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி உள்ளிட்டோா். 
ஈரோடு

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் புதிய தாா் சாலை பணி தொடக்கம்

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா்.

Syndication

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி ஒன்றியத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம் மன்னாதம்பாளையம் காவிரிக்கரையில் பிரசித்தி பெற்ற காளமங்கலம் குலவிளக்கம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவின்போது தோ் வலம் வரும் பாதை மண் பாதையாக உள்ளது. இப்பாதையை தாா் சாலையாக மாற்றித்தரும்படி கோயில் நிா்வாகம் மற்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டு, தாா் சாலை பணிகளை பூமி பூஜையுடன் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் லக்காபுரம் சாலை மாணிக்கம், வடக்கு ஒன்றிய அவைத் தலைவா் என்.சின்னசாமி, பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் சிவசங்கா், பாஜக தன்னாா்வ தொண்டு நிறுவனப் பிரிவு மாநிலச் செயலாளா் கிருத்திகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT