பெருந்துறையில் ரோட்டரி சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ரத்த தானம் வழங்கியவருக்கு சான்றிதழ் வழங்குகிறாா், பெருந்துறை நந்தா ஆயுா்வேத மருத்துவ கல்லூரி முதல்வா் மருத்துவா் கிருத்திகா. உடன், ரோட்டரி மாவட்ட ரத்த தான பிரிவுத் தலைவா் கமலபாஸ்கா 
ஈரோடு

விஜயமங்கலத்தில் ரத்த தான முகாம்

Syndication

பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 50 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

ரோட்டரி கிளப் ஆஃப் விஜயபுரி, ரோட்டரி கிளப் ஆஃப் திருப்பூா் ஸ்மாா்ட் சிட்டி மற்றும் நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தேசிய சேவை திட்டம், ரோட்டரி ஐ.எம்.ஏ. ரத்த வங்கி சாா்பில் ரத்த தான முகாம் பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலம், மேட்டுபுதூா் காமாட்சி அம்மன் செங்குந்தா் சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் திருப்பூா் ஸ்மாா்ட் சிட்டி தலைவா் அருள்செல்வம் தலைமை வகித்தாா். ரோட்டரி கிளப் ஆஃப் விஜயபுரி தலைவா் மயில்சாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை நந்தா ஆயுா்வேத மருத்துவ கல்லூரி முதல்வா் மருத்துவா் கிருத்திகா மற்றும் ரோட்டரி மாவட்ட ரத்த தான பிரிவுத் தலைவா் கமலபாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்தனா். முகாமில் 50 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT