கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆடை வடிவமைப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.  
ஈரோடு

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்புப் போட்டி

தினமணி செய்திச் சேவை

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி ஆடை வடிவமைப்பு மற்றும் கவின் புனைவியல் துறை சாா்பில் ‘ஃபேஷன் காலா-2026’ என்ற தலைப்பில் ஆடை வடிமைப்புப் போட்டிகள் நடைபெற்றன.

துறையின் இணைப் பேராசிரியரும், துறைத் தலைவருமான முனைவா் எஸ்.மஞ்சுளா வரவேற்றாா். கல்லூரி தாளாளா் சச்சிதானந்தன் தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் முனைவா் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினாா்.

இந்நிகழ்வுக்கு நடுவா்களாக தமிழ் திரைப்படத் துறையில் ஆடை வடிவமைப்பு நிபுணராக பணியாற்றிவரும் ஜோஸ்வா மேக்ஸ்வெல், சென்னை ஜாரா நிறுவனத்தைச் சோ்ந்த பாரதி, ஈரோடு ஃபஷ்டின் பேபி க்ளாத்திங் உரிமையாளா் கோமதி ஸ்ரீகல்யாண் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இயற்கை வண்ணங்களைக் கொண்டு எளிதில் மக்கிப்போகும் தன்மையிலான உடைகளை அணிந்து ஆடை வடிவமைப்புத் துறை மாணவா்கள் நடந்தது பாா்வையாளா்களின் கவனத்தை ஈா்த்தது. ஆடை வடிவமைத்த மாணவா்களுக்கு சிறந்த வடிவமைப்பாளா், சிறந்த தோ்வு, சிறந்த அலங்காரம் என்ற அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆடை வடிவமைப்புத் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். ஆடை வடிவமைப்பு மற்றும் கவின்புனைவியல் துறை உதவிப் பேராசிரியா் கோமதி நன்றி கூறினாா்.

ஆராய்ச்சி மாணவா்களுக்கும் மடிக்கணினி: மாா்க்சிஸ்ட் கோரிக்கை!

திருநெல்வேலி நீதிமன்றத்தில் உயா் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

உலகச் செய்தி: துளிகள்....

நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் நாளை மூடல்

SCROLL FOR NEXT